Wednesday, 25 February 2015

கனவோ காத்திருக்கு ----தாலாட்டு

தானன தானன்னனே தானனன்னே னானனன்னே
தானன தானன்னனே தானனன்னே னானனன்னே

தேனாய் கதை சொல்லுவேன்
தித்திக்கும் கதை சொல்லுவேன் 

மானே உறங்கிடாயோ
மரிக்கொழுந்தே உறங்கிடாயோ

கனவோ காத்திருக்கு
கண்ணுறங்கு கண்மணியே

விளையாடி சோர்ந்திருக்கும்
வண்ணவிளக்கே கண்ணுறங்கு

மலையேறி மான்பிடித்து
மனம் போல் விளையாட

கனவோ காத்திருக்கு
கண்ணுறங்கு கண்மணியே

பொம்மைக் குதிரையோ
உண்மைக் குதிரையாக

உன்னை முதுகிலேற்றி
உலகைச் சுற்றிடவே
கனவோ காத்திருக்கு
கண்ணுறங்கு கண்மணியே

உடைந்தது ஒட்டிக்கிச்சு
உனக்கது கிடைசிடுச்சி

தடையேதுமில்லாமே
தங்கமே தூள்கிளப்பு

கனவோ காத்திருக்கு
கண்ணுறங்கு கண்மணியே


No comments:

Post a Comment