Wednesday 25 February 2015

அறிவுத் தோட்டம் -- இது ஒரு விவசாயினுடைய கதை

இயற்கை வேளாண்மை மீது அவருக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டது. தானே அதனை நிரூபிக்க வேண்டும் என் வேட்கை கொண்டார். நகரத்தில் இருந்த தன் வீட்டை விற்று 2.5 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.
ஊரெல்லாம் ஒரே கேள்விதான். இவருக்கு என்ன பைத்தியமா?
எல்லோரும் நிலத்தை விற்று வீடுவாங்கி முதலீடாக மாற்றும் போது இவர் எதிர் திசை பயணம் செய்கின்றார் என்பது தான். ஆனாலும் அவர் முயற்சியை தொடர்ந்தார்.
10 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் வரண்டுபோன அந்த பூமிக்கு தண்ணீருக்கு வழிவகுத்தார் .நிலத்தை உயிராக காக்கும் ஒரு உன்னத குடும்பம் அவருக்கு உறுதுணையாக நின்றது .இரசாயன உரம்,பூச்சி கொல்லி நிலத்து பக்கம் வராமல் பார்த்து கொண்டார். இயற்கை உரமாக மாட்டுச்சாணம்,மண்புழு உரம்,கடற்பாசி உரம் ,பஞ்சகாவியம் என் நிலத்தை திணரடித்தார். நிலத்திற்கு உயிர் திரும்பியது.வண்ணத்துப் பூச்சிகள் வலம் வரத்தொடங்கின. நிலம் தன் மகிழ்ச்சியை பச்சை கம்பளம் விரித்து வரவேற்றது. மூன்று ஆண்டுகள் காத்திருந்த விவசாயி இப்போது நம்பிக்கையோடு இருக்கிறார். அந்த மகிழ்ச்சியைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஆம் அந்த விவசாயி நானேதான்.
மாமரங்கள் ,தென்னைமரங்கள் உயிர் பெற்று பசுமையாக மாறத் துவங்கியுள்ளன.
பார்க்க விரும்புபவர்களை அன்போடு அழைக்கிறோம்.


8 comments:

  1. நேரில் நண்பர்களுடன் வந்து காண விரும்புகிறேன். தங்களுக்கு ஆட்சேபம் இல்லையெனில் இடம் எங்கே என்று தெரிவிக்கவும். jigopi@yahoo.co.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவிற்கு நன்றி.அறிவுத்தோட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.காட்பாடி இரயில் நிலையதிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.தாங்கள் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நான் 24.03.15 முதல் 31.3.15 வரை வேலூரில் உள்ளேன்.அது சமயம் வந்தால் நேரி பேச ஏதுவாக் இருக்கும்.என் கை பேசி எண்: 9443032436

      Delete
  2. நேரில் வந்து காண விரும்புகிறேன். தங்களுக்கு ஆட்சேபம் இல்லையெனில் இடம் எங்கே என்று தெரிவிக்கவும்.

    REPEAT

    THOTTAM SUPER SIR
    bawashareef786@gmail.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவிற்கு நன்றி.அறிவு த்தோட்டம் வேலூர் மாவட்டதில் உள்ளது.என் கைபேசி எண்:9443032436

      Delete
  3. வணக்கம், வலைச்சரத்தில் உங்கள் தளம் அறிமுகம் செய்துள்ளேன், இணைப்பு
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_4.html#comment-form

    ReplyDelete
    Replies
    1. அறிமுகம் செய்தமைக்கு நன்றி.இயற்கை விவசாயம் தொடர்பாக தொடர்ந்து பேசுவோம்.

      Delete
  4. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் பிரதிபா அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்

    வலைச்சர தள இணைப்பு : என்னைக் கடந்து செல்பவனே

    ReplyDelete
    Replies
    1. அறிமுகம் செய்தமைக்கு நன்றி.இயற்கை விவசாயம் தொடர்பாக தொடர்ந்து பேசுவோம்.

      Delete