Tuesday 21 May 2019


அறிவுத் தோட்டம்
( மாற்றங்களின்  நாற்றங்கால் )
காளாம்பட்டு கிராமம், வேலூர் மாவட்டம்
இயற்கை வேளாண்மை  - கருத்துக் களஞ்சியம்
( Organic Farming  &  Resource Repository )
--------------------------------------------------------------------------------------------
10 ஆண்டுகளுக்கு மேலாக  பராமரிப்பின்றி கிடந்த நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்பட காந்திருந்தது.  அழிந்து கொண்டிருந்த நிலம் கடந்த  6 ஆண்டுகளில் .  நூறு சதவீதம் இயற்கை வேளாண்மை  மூலம் பூஞ்சோலை ஆகியுள்ளது. அதுவே
அறிவுத்தோட்டம் .
 இயற்கை வேளாண்மை  இயல்பானதே, இலாபகரமானதே
 என பறை சாற்றி விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து களித்து விவசாயம் பற்றி கேட்டு அறிந்து செல்கிறார்கள். விவசாயமே அறியாத அவர்கள் உற்சாகத்துடன் வருவது  புதிய தலைமுறையினர் மீதான  நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது. 
நிறைந்து வழியும் இதன் மலர்ச்சியினை காவேரி ,பாலிமர், மெகா, ஜெயா மற்றும் மக்கள்    தொலைக்காட்சிகளில்  பலமுறை ஒளிபரப்பினர்.
அறிவுத்தோட்ட்த்தின் சிறப்புகளை  இந்தியன் எக்ஸ்பிரஸ் . டைம்ஸ் ஆப் இந்தியா,தினமணி,தினமலர் மற்றும் காலைக் கதிர் ஆகிய பத்திரிக்கைள் பிரசுரித்தன. On line  பேப்பர்  Better India, மற்றும்  the optimist citizen வெளிவந்து இந்திய அளவிலும்  ஒரு தேடலை உருவாக்கியது.
ஆற்காடு அரிசித்திருவிழா- 2019 இல் சிறந்த விவசாயப் பண்ணைவிருதினைப்பெற்றது.
தமிழ்நாடு  யூனியன்  ஆப் ஜெர்னலிஸ்டு ,வேலூரி மத்திய மாவட்டம்
 வேலூர் வைரம்என பட்டமளித்தது.
ரசாயனங்கள் கலக்காத  இயற்கைவழி முறைகளை அறிவியல் அணுகு முறைகளை மாநிலத்தின் பல பகுதியிலிருந்து விவசாயிகள் கேட்டறிவதும்  நேரில் வந்து பார்ப்பதுமாக உள்ளனர்.  
அறிவுத்தோட்ட்த்தில் அப்படி என்னதான் உள்ளது?
Ø பசுமை நிறைந்த தோட்டப் பயிர்கள், கத்தரி, தக்காளி, பச்சை மிளகாய்
Ø வளம் கொழித்த குளுமையும் அமைதியுமான மாந்தோப்பு.
Ø ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள் தோப்பாக.
Ø பார்க்கவே பரவசமூட்டும் வாழைத் தோட்டம்.
Ø தொட்டாலே மணக்கும் எலுமிச்சை மரங்கள்.
Ø சப்போட்டா, நெல்லி, ஆரஞ்சு, மாதுளை , சீத்தா, சாத்துக்குடி, பப்பாளி பழ மரங்களாக தோட்டத்தில்.
Ø முகப்பில் வரவேற்கும் பூந்தோட்டம்: ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி, பட்ரோஸ், செம்பருத்தி மற்றும் பலவகை சிறுமலர்களின் கூட்டம்.
Ø தோட்ட்த்தின் அரணாக புங்கை, வேப்ப மரங்கள் மற்றும் பல வகை மரங்கள் , வேலிகளுக்கு துணையாக காகிதப்பூக்கள்
Ø முகப்பில் கூட்டம் நடத்த அரங்கம் அமைத்து அழைக்கும் மரங்களின் குடை பிடிப்பு
Ø மூலிகைச் செடிகள் சிறப்பு கவனத்துடன் தனியாக பாத்திகள். துளசி, தூதுவலை, வல்லாரை, முடக்கறுத்தான், கல்யாண முருங்கை, சிறு குறிஞ்ஞான்  என 100 வகைகளுக்கு மேல் .
Ø பசும்தாள் உரம் ,மண்புழு உரம், பஞ்சகாவியா தயாரிப்பு.
Ø  நவீன தொழில்நுட்ப சொட்டுநீர் பாசனம்
Ø மழைநீர் சேகரிப்புக்கு தோட்ட்த்திலேயே பண்ணைக் குட்டை
Ø ஒவ்வொருமாதமும் மூன்றாம் ஞாயிறு விவாசாயிகள் சந்திப்பு நடைபெற்றுவருகிறது. தேனீ வளர்ப்பு, அசோலா வளர்ப்பு பயிற்சிகள் விவாசாஇகளுக்கு மிக்க பயனளித்து வருகிறது.
வருபவர்களுக்கு  விளையாட்டுகளுடன் பயிற்சிகளும் தரப்படுகிறது.
 உணவும் தோட்டத்திலேயே தயாரித்து வழங்கவும் ஏற்பாடு உள்ளது.

இயந்திர வாழ்வின்  இறைச்சலுக்கிடையில்  ,
இயற்கை நேசிப்பின் இசை
------------------------------------------------------------------------------------------------
அறிவுத் தோட்டம்  ஒரு  கற்கும் களம்
தொடர்புக்கு:   கு.செந்தமிழ்செல்வன்,  9443032436,      senthamil1955@gmail.com
------------------------------------------------------------------------------------------------

Wednesday 25 February 2015

அறிவுத் தோட்டம் -- இது ஒரு விவசாயினுடைய கதை

இயற்கை வேளாண்மை மீது அவருக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டது. தானே அதனை நிரூபிக்க வேண்டும் என் வேட்கை கொண்டார். நகரத்தில் இருந்த தன் வீட்டை விற்று 2.5 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.
ஊரெல்லாம் ஒரே கேள்விதான். இவருக்கு என்ன பைத்தியமா?
எல்லோரும் நிலத்தை விற்று வீடுவாங்கி முதலீடாக மாற்றும் போது இவர் எதிர் திசை பயணம் செய்கின்றார் என்பது தான். ஆனாலும் அவர் முயற்சியை தொடர்ந்தார்.
10 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் வரண்டுபோன அந்த பூமிக்கு தண்ணீருக்கு வழிவகுத்தார் .நிலத்தை உயிராக காக்கும் ஒரு உன்னத குடும்பம் அவருக்கு உறுதுணையாக நின்றது .இரசாயன உரம்,பூச்சி கொல்லி நிலத்து பக்கம் வராமல் பார்த்து கொண்டார். இயற்கை உரமாக மாட்டுச்சாணம்,மண்புழு உரம்,கடற்பாசி உரம் ,பஞ்சகாவியம் என் நிலத்தை திணரடித்தார். நிலத்திற்கு உயிர் திரும்பியது.வண்ணத்துப் பூச்சிகள் வலம் வரத்தொடங்கின. நிலம் தன் மகிழ்ச்சியை பச்சை கம்பளம் விரித்து வரவேற்றது. மூன்று ஆண்டுகள் காத்திருந்த விவசாயி இப்போது நம்பிக்கையோடு இருக்கிறார். அந்த மகிழ்ச்சியைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஆம் அந்த விவசாயி நானேதான்.
மாமரங்கள் ,தென்னைமரங்கள் உயிர் பெற்று பசுமையாக மாறத் துவங்கியுள்ளன.
பார்க்க விரும்புபவர்களை அன்போடு அழைக்கிறோம்.


கறார் முடிவு: வெட்டு ஒன்று துண்டு இரண்டு

படிப்பறிவு மட்டும் இன்றைய வாழ்வுக்குப் போதாது. சுழற்றி அடிக்கும் வாழ்க்கையின் பல்வேறு சூழலில் தைரியமாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் திறமை அவசியம் வேண்டும். இந்த திறன் பெறாததால் படித்தவர்கள் கூட இக்கட்டான தருணத்தில் தற்கொலைதான் முடிவு என வாழ்க்கையே முடித்து கொள்கிறார்கள்.
புத்தகங்களில் கிடைக்காத பல புதிய படிப்பினைகளை நாம் நம்மைச்சுற்றி நிகழ்வனவற்றை கூர்ந்து பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். மாமேதைகளிடம் என்பதில்லை சாதாரண மனிதர்களிடமும் சில ேரங்களில் அசாதரண முடிவுகளைக்காணலாம்.
சமீபத்தில் நமது தோட்டத்தில் ஒரு தொழிலாளியின் அனுபவத்தைக்கேட்டு அசந்து போனேன். இனி அப்படித்தான் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தேவை வரும்போது முடிவு எடுக்கவேண்டும் என முடிவெடுத்தேன்.


அவர் ஒரு மரம் ஏறும் தொழிலாளி. ஒரு முறை தென்னை மரம் ஏறி தேங்காய் குலைகள் தள்ளும் போது மரத்தில் இருந்த பாம்பு இவரை கை நடுவிரலின் மத்தியில் கொத்திவிட்டது.இவர் தென்னைமரத்தில் இருந்து கீழே இறங்கி சிகிச்சை பெறுவதற்குள் விசம் தலைக்கேறிவிடும். பாப்புக்கடியின் வலியிலும் தென்னைமரத்தின் உச்சியில் மரணத்தின் போராட்டத்திலும் எந்த வித பதற்றமும் இன்றி ஒரு முடிவெடுத்தார். தன்னிடமிருந்த கத்தியாலேயே தனது விரலை பாம்பு தீண்டிய வரை வெட்டிக்கொண்டார். உயிருக்கு வந்த ஆபத்து பாதிவிரலோடு போனது. அதன் பிறகும் தன் தொழிலின் மீது எந்த வெறுப்பும் இன்றி தொடர்கிறார் என்பது தான் அதன் முத்தாய்ப்பு.
இந்த தெளிவும் தைரியமும்தானே நமக்கு வேண்டும்.